தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதனை தான் விரும்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
இந் நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதனை விரும்புகின்றேன்.
ஏன் என்றால் நாங்கள் அரசியல் சம்பிரதாயமொன்றை அறிமுகம் செய்து வைப்பதற்கு ஆயத்தமாகின்ற போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக அரசியலுக்குள் நுழைந்து அவர்கள் இந் நாட்டின் எதிர்க்கட்சியாக செயற்படுவது நாட்டிற்கு மிக பெரிய வெற்றியாகும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக செயற்படுவதன் மூலம் எங்களுக்குள் இருந்த நம்பிக்கையின்னை, பிழைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு உலகத்திற்கு சிறந்த நாடாக எங்கள் நாட்டை உதாரணமாக காட்ட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments