கல்முனையில் பெரும்பான்மையாக வாழும் கல்முனைத்தமிழர்களின் பூர்வீகத்தை இல்லாதொழிக்கும் ஆணிவேரை அறுத்தெறியும் கல்முனைநகர புதிய அபிவிருத்தித்திட்டத்தை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமுமான ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
புதிய கல்முனை நகர அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக தமது வன்மையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
உத்தேச கல்முனை நகர அபிவிருத்தித்திட்டம் முன்னாள் அமைச்சர் அஸ்ரப் காலத்தில் கொண்டுவரமுற்பட்டவேளை அதனை கல்முனைவாழ் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அன்றே எதிர்த்தனர்.
அதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதாவது இத்திட்டத்தை தமிழர்கள் அன்றே நிராகரித்திருந்தனர். எனவே இதனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இத்திட்டத்தை முற்றாக நிராகரிக்கின்றோம், எதிர்க்கின்றோம்.
தற்போது அவசரஅவசரமாக தமிழ்மக்களின் சம்மதமில்லாமல் ஒருதலைப்பட்சமாக முன்னெடுக்கப்படவிருக்கும் இப்புதிய நகரஅபிவிருத்தித் திட்டத்தால் கல்முனையில் தமிழர்களின் இனவிதாசாரத்தைக்குறைத்து தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்குவது.
தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து காணிஉரிமத்தை இல்லாதொழிப்பது இயற்கையான வெள்ளவடிச்சல் நிலையை பாதிப்புக்குட்படுத்தி வெள்ளத்தை ஊருக்குள் வரவழைத்தல் போன்ற பாரிய பாதிப்பு எதிர்நோக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கும் ரெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் மேலும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கல்முனையில் தமிழ்மக்களே மிகஅதிகமாக வாழ்ந்துவருகின்றனர். இதனை திட்டமிட்டு குறைக்குமுகமாக இன்றைய புதிய கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு போன்று அடுக்கு மாடிகளைக் கட்டி கல்முனைத் தொகுதி விகிதாசாரப்படி குடியேற்றுவதாகக் கூறிக் கொண்டு முஸ்லிம்களை பெரும்பான்மையாக குடியமரச் செய்து கல்முனையில் தமிழ்மக்களின் விகிதாசாரத்தைகுறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு போன்று அடுக்கு மாடிகளைக் கட்டி கல்முனைத் தொகுதி விகிதாசாரப்படி குடியேற்றுவதாகக் கூறிக் கொண்டு முஸ்லிம்களை பெரும்பான்மையாக குடியமரச் செய்து கல்முனையில் தமிழ்மக்களின் விகிதாசாரத்தைகுறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கல்முனை புதிய நகரை வியாபார மத்தியகே;நதிர நிலையமாகமாற்றி தமது பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்வதும் மற்றுமொரு தந்திரேபாயமாகும்.
இப்புதிய திட்டத்திற்கு 800ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ளது.
இப்புதிய திட்டத்திற்கு 800ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ளது.
அதில் அரைவாசிக்கும் மேற்பட்ட காணிகள் தமிழர்களின் பூர்வீக காணிகளாகும். தமிழர்களின் காணி உரிமத்தை அடியோடு இல்லாதொழித்து கல்முனை என்ற ஊர் முஸ்லிம்களுடையது என்பதை பறைசாற்றுவதற்கு அமைச்சர் ஹக்கீம் திட்டமிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் காலஞ்சென்ற அஸ்ரப் இந்த புதிய நகர அபிவிருத்தித்திட்டத்தை முன்னெடுக்க முனைந்தபோது எல்லைக்காவலன் அண்ணன் ஏகாம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் முன்னின்று அதனை நியாயமான காரணங்களுடன் எதிர்த்தோம். அதனால் அன்று அது கைவிடப்பட்டது.
பின்னர் முன்னாள் அமைச்சர் மையோண்முஸ்தபா காலத்தில் இத்திட்டத்தை முனனெடுக்க முனைப்பொன்று காட்டப்பட்டது.அதற்கு ஹரீஸ் எம்.பியும் உடந்தiயாகவிருந்தார். அன்று நான் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தேன். இத்திட்டத்திற்கு முற்hறாக எதிர்ப்புகாட்டியதோடு அப்போது அமைச்சராகவிருந்த தினேஸ்குணவர்த்தனாவை சந்தித்து எமது பாதகநிலைமைகளை சுட்டிக் காட்டியிருந்தோம்.
இத்திட்டத்திற்கு அங்கு வாழும் பெரும்பான்மை மக்களான தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் அபிப்பிராயம் பெறப்படவில்லை.குறிப்பாக அப்போதிருந்த தமிழ்பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் 03 தமிழ் மாகாணசபை உறுப்பினர்களின் சம்மதம் பெறப்பட்டிருக்கவில்லை. கலந்துரையாடப்படவுமில்லை.
எனவே இத்திட்டம் அமுல்படுத்தப்படவேண்டுமாகவிருந்தால் தமிழ் மக்களின் சம்மதம் பெற்றபடவேண்டும் என்று கூறி அமைச்சர் தினேஸ்குணவர்த்தன அத்திட்டத்தை அன்று நிறுத்தினார். அதனால் அது கைவிடப்பட்டது.
இன்று நல்லாட்சி நிலவுகின்ற இக்காலகட்டத்தில் மூன்றாவது தடவையாக அமைச்சர் ஹக்கீம் தேர்தல் காலத்தில் இதன் தாற்பரியமறியாத ரணிலுடன் பேசி வாக்குறுதி வழங்கியதாகக்கூறிக்கொண்டு திடுதிப்பென்று வந்து இத்திட்டத்தை தமிழ்மக்களின் சம்மதம் பிரதிநிதிகளின் ஒப்புதலின்றி செய்ய முனைந்துள்ளார்.
தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற கல்முனையில் தமிழ்மக்களது பிரதிநிதிகளின் சம்மதத்தையோ மக்களின் கருத்துக்களையோ சற்றும் பெறாமல் அவர்களை முற்றாகவே புறந்தள்ளி சர்வாதிகாரப்போக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவிளைவதன் காரணமென்ன ? இதுதான் ஜனநாயகமா?
இத்திட்டம் என்றோ தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதற்கு அங்கீகாரம் இன்றைக்குமட்டுமல்ல என்றைக்குமே கிடைக்காது.
அதனையும் மீறி இத்திட்டத்தை அமுலாக்க முற்பட்டால் நாம் பல்வேறு கோணங்களில் சிந்திக்கவேண்டிவரும் என்பதோடு இராஜதந்திரரீதியில் வெகுஜனப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிவரும் என்பதையும் இனஜக்கியம் பேசுவோர் மற்றும் சமாதானவிரும்பிகளுக்கு முன்கூட்டியே வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
0 Comments