கொட்டதெனியாவ சிறுமி கொலைக்கு எதிராக இன்றைய தினம் திவுலப்பிட்டிய பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சென்ற காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமானார்.
மரணமானவர் திவுலப்பிட்டிய காவற்துறையில் சேவையாற்றியவர் என காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அவரின் வயது 38 எனவும், அவர் யக்கல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments