எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை பேரவையின் ஆணையாளர் வெளியிடவுள்ளார்.
குறித்த போர்க்குற்ற அறிக்கை வெளியானவுடன், அதனை மறுத்து, தம்மை நியாயப்படுத்த இலங்கை அரசாங்கம் முயன்று வருகிறது.
இந்நிலையில் அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடக் கூடாதென ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலிநைவ்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத்தை முழுமையாகவும் நேர்மையாகவும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலளார் நிஷா பிஷ்வாலுடன் இருவரும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை செய்ய இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளமை குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்த தீர்மானம் தமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என அமையத்தின் பேச்சாளர் ஆர்.கே குருபரன் தெரிவித்துள்ளார்.
0 comments: