நாடாளுமன்றில் எதிர்கட்சியில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கவுள்ளமையினால் எதிர்கட்சி தலைவர் பதவி முன்னணிக்கு கிடைக்காதென தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அரசாங்கத்தின் ஒரு கட்சியாகின்றமையினாலே இந் நிலைமை உருவாகியுள்ளது. அத்துடன் முன்னணியின் சிலர் எதிர்கட்சியில் ஆசனங்களை பெற்று கொண்டாலும் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியாது.
அப்படி என்றால் முன்னணிக்கு அடுத்தபடியாக அதிக ஆசனங்களை பெற்று கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை 16 ஆகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அமைச்சு பதவிகளை பெற்று கொண்டால் எதிர்கட்சி தலைவர் பதவியை கேட்பதற்கு தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.


0 Comments