Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐ.தே.கவுக்கு 30, சு.கவுக்கு 15 அமைச்சுகள்

இந்த முறை அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது, முன்னாள் அமைச்சர்கள் பலரின் அமைச்சு பதவிகளில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நீதி மற்றும் சட்ட ஒழுங்கு, மின்சக்தி மற்றும் சக்தி வலு, ஊடகத்துறை, உள்விவகாரங்கள், காணி, பெருந்தெருக்கள் உள்ளிட்ட மேலும் பல அமைச்சுக்களுக்கு புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன், முன்னர் இருந்த அமைச்சுகளுக்கு மேலதிகமாகவும் பல அமைச்சுகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு 30 அமைச்சுப் பொறுப்புக்களையும், சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு 15 அமைச்சுப் பொறுப்புக்களையும் பகிர்ந்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

அத்துடன் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள 15 அமைச்சுப் பொறுப்புக்களில், முக்கியமான அமைச்சுப் பதவிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

இதன்படி, உயர் கல்வி, விவசாயம், பெருந்தெருக்கள், கனிய எண்ணை, சமூர்த்தி, மீன்பிடி உள்ளிட்ட அமைச்சுகள் பல சுதந்திர கட்சிக்கு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அந்த அமைச்சு மீளவும் கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0 Comments