புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 2 ஆம் திகதி சத்தியப் பிரதமாணங்களை மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு இறுதி தீர்மானம் எட்டப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது நிறைவு தினம் செப்டெம்பர் 2 திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.
அன்றையதினம் கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் பல முக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்காரணமாக அமைச்சரவை பதவிப்பிரமாணங்களை மேற்கொள்வதில் நேர ஒதுக்கீடு நெருக்கடி நிலை தோன்றலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் ஏற்கனவே, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரமவின் கூற்றுப்படி, புதிய அமைச்சரவை எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் என தெரிவித்திருந்தார்.
0 Comments