புத்தளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5ம் திகதி சிறுமியின் காதலர் எனக் கூறப்படும் நபரினால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த மேலும் இரண்டு இளைஞர்கள் மாணவி வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவதை கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளதாகக் கூறி அவரை அச்சுறுத்தி மீண்டும் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவி ஒருவரே கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ் புங்குதீவு மாணவி மீதான கூட்டு பாலியல் வன்புணர்வின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மற்றுமொரு வன்கொடுமை சம்பவம் பதிவாகியுள்ளது.


0 Comments