Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கண்பார்வையற்ற எஜமானியை விபத்திலிருந்து காப்பாற்றிய நாய்


அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள அப்பிள்டன் நகரை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் வசித்து வருபவர் அட்ரே ஸ்டோன். இவர் கண்பார்வையை இழந்தவர்.
 
இவர் தனக்கு துணையாக 8 வயது வழிகாட்டி நாயான பிகோவை அழைத்து கொண்டு வெளியே செல்வது வழக்கம்.
 
கடந்த திங்கட்கிழமையும் இதேபோல் அப்பகுதியில் உள்ள வடக்கு பிரதான வீதியை பிகோவுடன் அட்ரே ஸ்டோன் கடந்து கொண்டிருந்தார் அப்போது வீதியின் நடுப்பகுதியை நெருங்கியபோது, அவ்வழியே வந்த ஒரு பஸ்சின் சாரதி இவர்கள் வீதியை கடப்பதை கவனிக்காமல் அவர்கள் மீது ஏற்றிவிடுவது போல் மிகவும் நெருக்கமாக வந்துவிட்டார்.
 
எஜமானியை ஆபத்தில் இருந்து காப்பாற்ற தனது உயிரை துச்சமாக கருதிய பிகோ, உடனடியாக அந்த பஸ்சின் கண்ணாடி மீது எகிறிப் பாய்ந்தது.
 
இதையடுத்து, சாரதி உடனடியாக வேகத்தை குறைத்து, பஸ்சை நிறுத்தினார். அதற்குள் அட்ரே மீதும் பஸ் மெதுவாக மோதி விட்டது. இதனால், அவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.
 
மேலும் பஸ்சின் மீது எகிறிப் பாய்ந்ததில் முன்னங்கால், பின்னங்கால், மார்பு எலும்பு என மூன்று எலும்பு முறிவுகளுடனும், தலையில் பலத்த வீக்கத்துடனும் நியூயோர்க் நகர மிருக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிகோவின் உடல்நிலை தேறி வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதைப் போன்ற சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில்தான் எங்கள் வழிகாட்டி நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வைத்திருக்கிறோம் என பிகோவை, அட்ரே ஸ்டோனுக்கு விற்பனை செய்த பயிற்சியாளர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments