Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பழனி அருகே குளம் சிவப்பாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

 

சிவப்பாக மாறிய குளம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் மந்தைகுளம் உள்ளது. இந்த குளத்து நீரை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த கோடை காலத்தில் குளம் வறண்டு காணப்பட்டது. தற்போது சமீபத்தில் பெய்த மழையால் குளம் நிரம்பியது. 

குளத்தில் பாசிகள் படர்ந்து இருந்ததால் தண்ணீர் பச்சை நிறமாக காணப்பட்டது. ஆனால் திடீரென்று இந்த குளம் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்து வருகிறது. 

பொதுமக்கள் பீதி

எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தை நீரை பயன்படுத்தினால் தொற்று நோய் பரவும் என்றும், கால்நடைகளை குளிப்பாட்டினால் பாதிக்கப்படும் என்றும் பீதி அடைந்தனர். இதனால் இந்த குளத்துநீரை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். 

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பேராசிரியர் பேட்டி

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பழனி பழனியாண்டவர் கலைபண்பாட்டுக் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு சென்று அந்த குளத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

பழனி பாலசமுத்திரம் மந்தைகுளம் சிவப்பு நிறமாக காட்சி அளிப்பதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி அந்த குளத்தை சென்று பார்வையிட்டேன். தற்போது அந்த குளத்தில் ‘‘அசோலா’’ என்ற நீர்வாழ்பெரணி வகையைச் சேர்ந்த மிதவை தாவரம் படர்ந்துள்ளது. பச்சையாக இருந்த இந்த தாவரம் முதிர்ச்சி அடைந்து சிவப்பாக மாறியுள்ளது. ஆனால் குளத்தின் தண்ணீர் நிறம் மாறவில்ல. 

இதே குளத்தில் நன்னீரில் வளரும் அல்லிமலர்களும் பூத்துள்ளன. இந்த அல்லிமலர்கள் நன்னீரில் மட்டுமே பூக்கும். எனவே இந்த குளத்து தண்ணீரைப் பற்றி பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்த தாவரம் நுண்ணூட்ட சத்து உள்ளது. எனவே இதனை உலர்த்தி கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தலாம். 

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments