மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் மோட்டார் சைக்கிளின் கைப்பிடியினுள் கஞ்சாவை மறைத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒருவரை திங்கட்கிழமை (01) கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 195 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் மட்டக்களப்பு போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர். தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments