Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கியது


உலகின் பெரிய விமானமான A- 380 ரக விமானம், இன்று முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, இவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பாரிய விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவது இது இரண்டாவது தடவையாகும். அத்துடன் பகல் பொழுதில் தரையிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நோயால் பாதிக்கப்பட்ட குறித்த பயணி, சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • நீங்கள் இதுவரை கண்டிராத விமானமும், அது தரையிறங்கும் காட்சியும்... மிஸ் பண்ணாமல் பாருங்கள்!... (வீடியோ இணைப்பு)

Post a Comment

0 Comments