Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

போலி நாணயத்தாள் மூலம் லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்ய முயற்சித்தவர் கைது

அநுராதபுரம் பிரதேசத்தில் இரண்டு போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்ய முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொத்தர் சீட்டு கொள்வனவு செய்ய வழங்கிய பணம் குறித்து எழுந்த சந்தேகத்தின் பின் விற்பனை பிரதிநிதி பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments