பெரியநீலாவணை பாடசாலையின் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வரும் காணியை அபகரித்து, அத்துமீறி குடியேறும் நோக்குடன் முஸ்லிம்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.
இக்கண்டனப் பேரணியில் பெரியநீலாவணையில் உள்ள ஆலயங்களின் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் ஏனைய சமூகமட்ட அமைப்புக்கள் என பல அமைப்புக்களும் கலந்து கொண்டன.
இங்கு பேரணியாக சென்றவர்கள் தங்களது கைகளில் பாடசாலை காணியை அபகரிக்காதே, மைதானம் ஒன்றை பெற்றுத் தாருங்கள், பாடசாலை காணியை வேற்று அமைப்பு ஆக்கிரமிப்பதனை தடுத்து நிறுத்து, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு சென்றனர்.








0 Comments