சகல விதமான போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் சமூக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதுபோன்ற பிரேரணையொன்று கொண்டுவரும் போது சில தரப்பினர் தனக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுப்பார்கள்.
அத்துடன், மனித உரிமைகளை மீறுவதாக கதைகளையும் கூறுவார்கள்.
எதிர்ப்பை கவனியாது எதிர்கால நன்மைக்காக தீர்மானங்கள் எடுக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.


0 Comments