Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பழைய முறுகண்டியில் கொடூர விபத்து - 8 பேர் உடல் சிதறிப் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த எஸ்.டி.எஸ் தனியார் சொகுசு பேரூந்து இன்று அதிகாலை பழைய முறுகண்டி கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானது.
தரித்து வைத்திருந்த டிப்பின் மீது போது பல தடவைகள் புரண்டு எழுந்து குறித்த பஸ் விபத்துக்குள்ளானதில் எட்டுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
தனியார் பஸ் முதலாளிகள் சாரதிகளை தொடர்ச்சியாக வேலை செய்வதற்குப் பணிப்பதால் சாரதிகள் நித்திரை கொள்ளாது சோர்வடைந்து போவதாலேயே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதே போலவே இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்துச் சாரதிகளுக்கும் தொடர்ச்சியான வேலைகள் வழங்கப்படுவதாகவும் நீண்ட துாரப் பிரயாணங்கள் செய்யும் போது அவர்கள் சோர்வடைந்து பலதடவைகள் விபத்து ஏற்படவிருந்து மயிரிழையில் தப்பியதாகவும் கொழும்பு - யாழ்ப்பாணப் பயணிகள் தெரிவிக்கின்றனர். 

Post a Comment

0 Comments