Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இரட்டைக் குடியுரிமை கோரி 3000 பேர் விண்ணப்பம்!

இலங்கையில் இரட்டைக் குடியுரிமை கோரி 3000 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையை மீள ஆரம்பித்ததனைத் தொடர்ந்து சுமார் மூவாயிரம் பேர் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பில் புதிய நிர்வாக முறைமையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
கடந்த அரசாங்கம் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.
புதிய அரசாங்கம் மார்ச் மாதம் 3ம் திகதி முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையை ஆரம்பித்துள்ளது.
விண்ணப்பம் செய்தவர்களில் 600 பேர் வரையில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் 150 பேருக்கு வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து இரட்டைக் குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments