Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

260 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைப்பு—27 பேர் மீது வழக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல், அளத்தல் கருவிகளை பாவித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 260 வர்த்தக நிலையங்களை, அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் திடீரென சுற்றிவளைத்ததாக திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌஸாத் தெரிவித்தார். 

இதன்போது சட்டவிரோத நிறுத்தல், அளத்தல் கருவிகளை பாவித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 27 வர்த்தகர்கள், மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் அபராதம் அறவிடப்பட்டுள்ளது. 

கடந்த 5 மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை நிறுத்தல் அளத்தல் கருவிகளுக்கு முத்திரை பதித்ததனூடாக குறித்த திணைக்களத்திற்கு 10 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தற்போது இம் மாவட்டத்தில் புதிய ஆண்டிற்கான நிறுத்தல் அளத்தல் கருவிகளுக்கான முத்திரை பதிக்கும் நடவக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments