சென்னையில் இருந்து புதுச்சேசி சென்றபோது மாயமான விமானத்தை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கடலோர காவல்படை விளக்கம் அளித்து உள்ளது.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று மாலை புறப்பட்டு சென்ற கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் ரகவிமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தை கடலோர காவல்படையும் உறுதிசெய்து உள்ளது. இதுதொடர்பாக கடலோர காவல்படை கிழக்கு பிரந்திய ஐ.ஜி. ஷர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், சென்னையில் இருந்து சென்ற விமானம் சிதம்பரத்தில் இருந்து 16 மைல் தொலைவில் சென்றபோது மாயமானது. விமானமானது நேற்று இரவு 9:23 மணியளவில் மாயமானது.
விமானம் 10:30 மணிக்கு சென்னைக்கு திரும்பியிருக்க வேண்டும், ஆனால் விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. நேற்று இரவு 10:43 மணியளவில் இருந்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியானது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 பேருடன் மாயமான விமானத்தை, கடலோர காவல்படை மற்றும் கடற்படையை சேர்ந்த 8 கப்பல்கள், 4 விமானங்கள் மற்றும் படகுகள் தீவிரமாக தேடிவருகிறது. சென்னையில் இருந்தும் விமானம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சிதம்பரத்தில் இருந்து மாயமான விமானத்தை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது.
விமானத்தில் மூத்த விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இருந்தனர். ரேடார் உதவியுடனும் விமானத்தை தேடும்பணி நடைபெற்று வருகிறது, இருப்பினும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. விமானத்தை தேடும் பணியானது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வங்காள வரிகுடா கடலில் 800 மைல் நீளம், 45 மைல் அகலம் உள்ளடங்கிய கடல்பரப்பில் விமானத்தை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. டோர்னியர் ரகவிமானம் மாயமான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. என்று கூறிஉள்ளார்.


0 Comments