விளையாட்டு கல்வியை மேன்மைப்படுத்துவதைப் போலவே, கல்வியும் விளையாட்டை உயர்த்திக் காட்டும். விளையாட்டுகள் பாடங்களை கற்பதற்கான புது உத்வேகத்தை ஏற்படுத்தும். ஆனால்,
விளையாட்டும், விளையாட்டு வீரர்களும் கல்விக்கு எதிரானதாகவே முன்னிறுத்தப்பட்டு வருகின்றனர். இது முற்றிலும் உண்மைக்கு முரணானதுஎன தற்போது நிரூபணமாகி
வருகிறது.
மகளீருக்கான மாகாணமட்ட வலைப் பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பட்டிருப்பு வலயத்துக்கு உரித்தான "மட்/பட்/மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலயம்" இறுதிப் சுற்றுப் போட்டியில் ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் எமது பாடசாலை இரண்டாம் இடத்தைப் பெற்றது. இவ் வெற்றியானது எமது பாடசாலைக்கும் எமது வலயத்துக்கும் கிடைத்திருக்கின்ற வெற்றி எனப் பாடசாலை அதிபர் செ.நேசராசா அவர்கள் தெரிவித்தார்.
அத்தோடு இந்த மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி ராகுலன் மற்றும் ஆசிரியர் பே.யோகேஸ்வரன் மற்றும் இவர்களை இன் முகத்தோடு வரவேற்ற பெற்றோர்கள் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள். அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.





0 Comments