Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றியீட்டும்- கெஹலிய ரம்புக்வெல்ல

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றியீட்டும் என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் அரசாங்கம் அமைக்க சிறு கட்சிகளின் ஒத்துழைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் கசந்து விட்டது.
எதிர்காலத்தில் எவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்பதனை நான் இன்னமும் முடிவு செய்யவில்லை என அவர் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தாம் அந்த அழைப்பினை நிராகரித்ததாகவும் அண்மையில் கெஹலிய குறிப்பிட்டிருந்தார்.
எனினும், இந்த கருத்து பிழையானது எனவும், மூன்று தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள கெஹலிய முயற்சித்த போதிலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என கட்சியின் பொதுச் செயலாளா கபீர் ஹாசீம் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பிரதமரை சந்தித்து கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கெஹலிய கோரியிருந்தார் என கபீர் ஹாசீம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பெருந்தொகை இரும்புக் கம்பிகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ததாக கெஹலிய மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments