Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மோடி கவனம் செலுத்துகிறார்: பாரதீய ஜனதா கட்சி

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரோந்திர மோடி கவனம் செலுத்தி வருவதாக இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி கடந்த ஒரு வருடத்தில் இலங்கை மற்றும் இந்தியாவின் தலையீட்டுடன் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வடக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் நரோந்திர மோடி. இலங்கையில் தண்டனை அனுபவித்து வந்த 5 மீனவர்களை விடுவிக்க பிரதமர் தனிப்பட்ட ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டார்.
இலங்கையுடனான மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முரளிதர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை போல், இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுமா என்று எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ராவ், இரண்டும் இரு வேறுப்பட்ட பிரச்சினைகள் என தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் இந்துக்களை எடுத்து கொண்டால், அவர்கள் மத ரீதியாகவும் மனித உரிமை ரீதியாகவும் அடக்குறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
எனினும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அவர்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்க பாரதீய ஜனதா கட்சி கடமைப்பட்டுள்ளது எனவும் முரளிதர் ராவ் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments