Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வீதியை விட்டு விலகி கெப் வண்டி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில், ஹற்றனிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கினிகத்தேனை களுகல யட்டிதேரிய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் சாரதி உட்பட இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனா்.
எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்க சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனா்.
விபத்தில் உயிரிழந்தவா் பலாங்கொடை வேகபிட்டிய பகுதியை சேர்ந்த 33 வயதுடைய அனுர பிரியந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments