2014ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு 2014/2015 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய இக்கையேட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும் நாடளாவிய ரீதியில் விநியோக முகவர்களின் புத்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உதவிச் செயலாளர் (பல்கலைக்கழக அனுமதிகள்), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இல.20, வாட் பிளேஸ், கொழும்பு-07 என்ற முகவரியிட்டு மே மாதம் 29ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத்தபாலில் மட்டும் அனுப்பிவைக்கப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
0 Comments