புதிய நாடாளுமன்றத்தில் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பாக சிறிய கட்சிகள் எதிர்ப்புகளை வெளியிட்டு வருவதால், 20வது அரசியலமைப்புத் திருத்தம் சட்டம் குறித்து அமைச்சரவையால் இறுதி தீர்மானத்திற்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து அமைச்சரவை நேற்று இறுதி முடிவை எடுக்கவிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை அமைச்சரவையில் தாக்கல் செய்திருந்தார்.
எனினும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் அமைச்சர்கள் தமது கட்சிகளுக்கு இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் அநீதி ஏற்படும் எனக் கூறி, அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து திருத்தங்களை செய்து பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
0 Comments