மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (06) பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று வீதியை விட்டுச்சென்று விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த நான்கு பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த வான், மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியோரத்திலுள்ள தூண் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. வானில் பயணித்த மூன்று பேர் மற்றும் வான் சாரதி ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். கல்முனையை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை, வானின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


0 Comments