Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்/கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலய மாணவன் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்/கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தின் வாயிற் கதவின் முன்னால் இன்று   காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலைச் சிறுவன் பலியானதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் 2 ஆம் ஆண்டு கற்கும் கிரான்குளம் கிராமத்தைச் சேர்ந்த கே. மதுதர்ஷன் (வயது 6) என்ற சிறுவனே மோட்டார் சைக்கிள் விபத்தில்  உயிரிழந்தவராகும்.

சடலம் தற்போது ஆரையம்பதி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மேற்படி பாடசாலையில் ஆசிரியையின் கணவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடமபெறுகின்றன.



Post a Comment

0 Comments