எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் களமிறங்கும்!
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சியாக அகில இலங்கை தமிழர் மகாசபை என்ற புதியதொரு கட்சி உதயமாகியுள்ளது. இதுவடக்கு கிழக்கை மையமாகக்கொண்டு தனது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
தேர்தல் திணைக்களத்தில் அரசியல்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளஇக்கட்சி எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் களமிறங்கவுள்ளதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எனும் கொள்கைப்பிரகடனத்துடனும் உணர்ச்சியைக்குறைத்து உண்மையைத் தேடுவோம் என்ற செயற்பாட்டு பிரகடனத்துடனும் அரசியல் களமிறங்கவுள்ளது.
இப்புதிய கட்சியின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி க.விக்னேஸ்வரன் செயலாளராக அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்க பிரதிநிதியும் செங்கதிர் இலக்கியசஞ்சிகை ஆசிரியருமான த.கோபாலகிருஸ்ணன் ஆகியோர் தெரிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பத்திரிகையாளர் மாநாடுகள்!
எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக்குப்பின்னர் கிழக்கில் மட்டக்களப்பிலும் வடக்கில்எயாழ்ப்பாணத்திலும் இரு பத்திரிகையாளர் மாநாடுகளை நடாத்தி கட்சியின் கொள்கை மற்றும் செயற்பாட்டுத்திட்டங்களை மக்கள்முன் பகிரங்கமாக முன்வைக்கப்படவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.
இணக்க அரசியல் மூலம் தீர்வு!
கடந்த 30வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தினால் அழிவடைந்து சிதைவடைந்துள்ள வடகிழக்குவாழ் தமிழ்மக்களது அடிப்படைவ hழ்வாதார பிரச்சினைகளுக்கு இணகக் அரசியல் மூலம் தீர்வுகளைப்பெற்று செயற்படுத்தி அவர்களை சமுகபொருளாதார ரீதியில் கைதூக்கிவிடும் அதேவேளை அரசியலுக்குச் சமாந்தரமாக ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ்மக்களின் வெகுஜன அமைப்புகளையும் சமுகம் மற்றும் கலைஇலக்கிய செயற்பாட்டாளர்களையும் கல்விமான்களையும் துறைசார் தொழில்சார் நிபுணர்களையும் உள்ளடக்கியதாக கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழர் தேசியசபை ((Tamil National Council)ஒன்றினை நிறுவி அதனூடாக இனப்பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான நிரந்தர அரசியல்தீர்வுத்திட்ட யோசனையை முன்வைக்கும் திட்டமொன்றினையும் கட்சி கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்சி தோற்றமாக காரணம்..
மக்களுக்கு உண்மையையும் நேர்மையையும் மனோபலத்துடன் உழைக்கக்கூடிய ஊழல் மோசடியற்ற கண்ணியம்மிக்க அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டுவினைத்திறன்மிக்க அரசியல் அனுபவமும் ஆளுமையும் ஆற்றலும்மிக்க செயற்பாட்டாளர்களை கொண்டதாக அரசியலை தனி நபருக்காகவும் கட்சிக்குக்கும் அல்லாது மக்களுக்காக மட்டுமே கையாளக்கூடிய நவீன அரசியல் சிந்தனைகளை உள்வாங்கக்கூடிய இற்றைப்படுத்தப்பட்ட மாற்று அரசியல் தலைமைகளின் தேவை இன்றைய தமிழ் அரசியல் சூழலில் உணரப்படுகின்ற காரணத்தினாலே இக்கட்சி களத்தில் இறக்கப்;பட்டதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கட்சி முக்கியஸ்தரிடம் கட்சி தொடர்பாக கேட்டபோது அவர் ஆங்கிலத்தில் இரத்தினச்சுருக்கமாக பின்வருமாறு பதிலளித்தார்.


0 Comments