Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவை பாதை

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவைபாதை நேற்று(03.04.2015) குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு ,தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு புனித ஜுதா தெதயு தேவாலயத்தை வந்தடைந்தது. இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்ததினமாக பெரிய வெள்ளிக் கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள்.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காபவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசுகிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று புனிதயூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின்  தலைமையில் இடம்பெற்ற திருச்சிலுவைப்பாதையானது காலை 6.15 மணியளவில் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ்அசீசியார் தேவாலயத்திலிருந்து பாதையாத்திரையாக ஆரம்பிக்கப்பட்டு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு திருத்தலத்தினை காலை 9.00 மணியளவில் சென்றடைந்தது. இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்கியுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments