புதுவருடத்தில் தேசத்தை சௌபாக்கியம் நோக்கி நகர்த்துவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தாயின் ஒரே குழந்தைகளாக நாட்டை சௌபாக்கியம் நோக்கி கொண்டு செல்லும் தேசத்தின் கலாச்சார நிகழ்வே இந்த தமிழ் சிங்கள புத்தாண்டாகும்.
புதுவருடத்தின் மெய்யான அர்த்தம் வெளிப்பட்டும் நிற்கும் தருணத்தில் புதுவருட வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சூரியன் மீனு இராசியிலிருந்து மேட இராசிக்கு நகரும் சுப நேரத்தில் இயற்கையில் காணக்கிடைக்கும் வசந்தத்தின் புதிய ஜீவனுடன் புத்தாண்டு மலர்ந்துள்ளது.
இனங்களுக்கு இடையில் சமாதானமும் சகவாழ்வும் ஏற்படக் கூடிய இனிய ஆண்டாக இந்த புதுவருடம் அமைய வேண்டுமென ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


0 Comments