19ம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சட்டத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னர் நாடாளுமன்ற செயற்குழுவில் சமர்பித்து திருத்தங்களை செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட திருத்தங்களின் அடி;பபடையிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அதன் பின்னர் அரசாங்கம் இரண்டு தடவைகள் 19ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்துள்ளது. எனினும், இந்த திருத்தங்கள் உச்ச நீதிமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரதியில் உள்ளடக்கப்படவில்லை.
இவ்வாறான ஓர் நிலைமையில் நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டங்களின் போது சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

.jpg)
0 Comments