Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில்இழுத்து மூடப்பட்ட சம்சாக்கடை சம்சாவை சாப்பிட்ட மாணவி மயக்கத்தில்

மனித பாவனைக்குதவாத பழுதடைந்த சம்சாவை விற்பனை செய்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த உணவு விற்பனை  நிலையம் சுகாதார அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்சாவை சாப்பிட்ட பாடசாலை மாணவியொருவர் சுகவீனமுற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையில் சம்சாவை வாங்கி இம்மாணவி சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்டு சற்று நேரத்தில் வாந்தியும் மயக்கமும் ஏற்படவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் சிறுவர் வைத்திய நிபுணரான மேற்படி மாணவியின் தாய் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.
சமுசா உண்டபின் ஏற்பட்ட பிரச்சினையென அடையாளம் கண்டதனால் குறித்த சிற்றுண்டிச்சாலையை சுகாதார அதிகாரிகள் முற்றுகையிட்ட போது பல நாட்களுக்கு முன் தயாரித்த பழுதடைந்த மனித பாவனைக்குதவாத பெருமளவு சமுசாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ரீ.எல்.ஏ.மனாப் முன்னிலையில் குறித்த சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செயயப்பட்டுள்ளதுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments