ஜேர்மனியின் கிழக்கு ரூர் பிராந்தியத்தின் அம்பர் அறை எனப்படும் அருங்காட்சியகத்தில் இருந்த 70 ஆண்டு பழமையான கலைப்பொருட்கள் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் உலக ப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ஜேர்மனிய நாசி படையினரால் கொள்ளையிடப்பட்ட விலை மதிக்க முடியாத அருங்கலை பொருட்கள் இந்த அம்பர் அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
அந்த பொருட்களை மீண்டும் அம்பர் அறையில் கொண்டு வந்து சேர்க்க உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஓய்வூதிய பெறும் முன்னாள் அதிகாரி ஒருவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ரஷ்யாவின் சென்ட் பீட்டர்ஸ் பேர்க் அருகில் இருந்த அழகான மாளிகை ஒன்றை ஜேர்மனிய படையினர் 1941 ஆம் ஆண்டு கொள்ளையிட்டதுடன் அவற்றை கொனிங்ஸ்பேர்க் என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்த பொருட்கள் அன்றைய கம்யூனிச கிழக்கு ஜேர்மனியின் ரூர் பிரதேசத்தில் உள்ள அம்பர் ரூம் என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
மேலும், அங்கிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களும் பொருட்களும் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.





0 Comments