முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க சாஸ்திரக்காரர்களையே நாடவேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களும் ஒரு இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
அதிலும் பலவற்றுக்கு உரிய ஆவணங்களும் இல்லை.
இந்தநிலையில் வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சாஸ்திரக்காரரான சுமணதாஸவின் உதவியை பெற தாமும் ஜனாதிபதியும் யோசித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டார்.
0 Comments