கிழக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகவுள்ள சமூக சேவை உத்தியோகத்தர் தரம் II இற்கு மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக திறந்த அல்லது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தகைமையுடைய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இவ்விண்ணப்பம் கோரலில் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் விண்ணப்பிக்க முடியாது எனவும் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக காட்டப்பட்டுள்ளதன் நோக் கம் என்ன? என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வை.கோபிகாத் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அம்பாறை மாவட்டமானது சுமார் தொண்ணூறாயிரம் தமிழ் வாக்காளர்களைக் கொண்டுள்ளதுடன் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டதொரு மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் இவ்வாறான அரச தொழில்கள் வழங்கும் போது ஏன் இவ்வாறான பாகுபாடு காட்டப்படவேண்டும் கடந்த காலங்களில் கூட முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் சிற்றூழியர்கள் நியமனங்கள் என்பனவும் எழுத்துப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் தெரிவுசெய்யப்பட்டும் தமிழர்கள் என்றபடியால் நியமனங்கள் மறுக்கப்பட்டு சகோதர இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு மறுக்கப்பட்ட பின்னர் இம்முறை பகிரங்கமாகவே இவ்வாறு ஒரு இனம் தாம் விரும்பிய ஒரு தொழிலினை செய்யாமல் தடுப்பதென்பது மிகவும் பாரியதொரு அப்பட்டமான மனித உரிமையை மீறும் செயலாகும்.
தமிழினமானது கடந்தகால யுத்தத்தின் பின்னர் தம்மிடமுள்ள கல்வியினை மாத்திரம் மூலதனமாக வைத்து தமது முன்னேற்றத்தினை ஏற்படுத்த நினைக்கும் காலத்தில் அதனையும் திட்டமிட்டு ஒரு மாவட்டத்தினுள் புறக்கணிப்பது நியாயமானதா?சகோதர இனங்கள் வியாபாரத்தில் முன்னேறும் அதே தறுவா யில் சிறியளவிலான கல்வியினை மாத்திரம் வைத்துக்கொண்டு பலத்த அரசியல் பின்னணியில் இவ்வாறாக மாகாண சபையின் அதிகாரத்தினைப் பயன்படுத்தி அவர்கள் மாத்திரமே அரச தொழில் பெறவேண்டுமென்று செயற்படுதலானது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமே. ஏனெனில் போட்டிப் பரீட்சையில் சிறந்த மதிப்பெண்ணை பெறும் ஒரு பரீட்சார்த்தியினை தேர்ந்தெடுப்பின் அப்பரீட்சையில் தமிழர்கள் முதன்நிலையில் இருப்பதால் இவர்களின் இயலாமை வெளிப்படும் என்பதனை நன்கு உணர்ந்தேன். இவ்வாறான தந்திரங்களை பாவித்து தமிழர்களைப் புறக்கணிக்கின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கின்றனர்.
இதனைப் போன்று பல அபிவிருத்தித் திட்டங்களிலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையும் திட்டமிட்டு சகோதர அரசியல் தலைமைகளால் தமிழர்களின் காணிகள் பறிக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருவதனையும் பிரதேசத்தின் அபிவிருத்திகளை நிர்வாகச் செயற்பாட்டினை முன்னெடுக்கவேண்டிய பிரதேச செயலகங்களுக்கு வழங்கி நிதிகளை வீணடித்த நிகழ்வுகளு இதுவரையில் நடந்தேறிய நிதர்சனமான உண்மையாகும். எல்லாவற்றிற்கும் மேலாக முன்னைய உள்ளூராட்சி அமைச்சரின் திட்டமிட்ட ரீதியில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச சபைகளின் செயற்பாட்டை முடக்குவதற்காக அவற்றிற்கு தேவைகளாக இருந்த பல வாகனங்களினை வழங்காமல் தேவைக்கு அதிகமாக உள்ள மற்றைய சபைகளுக்கே வழங்கியமையானது தமிழ் மக்கள் மீது எவ்வளவு பாகுபாட்டினை காட்டும் செயற்பாடு என்பதனை எம்மக்கள் நன்கு அறிவர்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடருமா னால் எதிர்காலத்திலும் மீண்டுமோர் ஆயு தக் கலாசாரம் தோன்றக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதனையும் கருத்தில் கொண்டு செயற்பட அனைத்து தலைமைக ளும் முன்வரவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.


0 Comments