Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஓமடியாமடு கிராம மக்களுக்கு சுவிஸ்லாந்து நவசக்தி விநாயகர் ஆலயம் வெள்ளநிவாரண உதவி.

மட்டக்களப்பு    மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான ஓமடியாமடு கிராம மக்களுக்கு சுவிஸ்லாந்து நவசக்தி விநாயகர் ஆலய நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக உணவுப் பொருட்கள் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள்  நேரடியாக சென்று வழங்கி வைத்தனர். இதன்போது பேரவை பிரதி நிதிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இதன்போது இக்கிராமத்தில் வசிக்கும் 151 குடும்பங்களுக்கு போர்வைகள் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமாக காணப்படும் ஓமடியாமடு கிராம மக்களுக்கு இவ் உதவியை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை சுவிஸ்லாந்து நவசக்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவிக்கின்றனர். அத்தோடு இவ் உதவியை பெற்ற மக்களும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.












Post a Comment

0 Comments