ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அரச செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன.
நேற்று வரை 27 பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்தள்ள அரசு, இரு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே தன்பக்கம் எடுத்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய அளவில் கட்சித் தாவல் இடம் பெறும் என கூறப்படும் நிலையில் தமது பலத்தை இழக்கும் முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதில் தீவிரமாக மகிந்த கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்.
இது தொடர்பான தகவல் எதிர்கட்சியினருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஐ.தே.க முக்கியஸ்தர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினராக உள்ள பலர் பலவித சலுகைகளை இழப்பதால் பாராளுமன்றம் கலைப்பதால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது…
0 Comments