எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாதகமான நிலைமைகளை எதிர்நோக்கியிருக்கும் ஆளுந்தரப்பு, பொது எதிரணியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் பொருட்டு தேர்தல் முடியும் மட்டும் கணிசமான அளவில் முகநூல்கள் (Face Book) மற்றும் இணையத் தளங்களை முடக்கிவிடத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு முகநூல்களும், இணையத் தளங்களும் பெரும் பங்காற்றியது போன்றதோர் நிலைமை இலங்கையிலும் ஏற்பட்டு, அதன் மூலம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வென்றுவிடக் கூடும் என்று ஆளும் தரப்பை உசுப்பும் பீதியும்,அச்சமும் இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது
0 Comments