ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் சேவ் த சில்ரன் அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ அமைப்பு நடைமுறைப்படுத்தும் நலிவுற்ற பெண்களை வலுவூட்டல் செயற்திட்டம் தொடர்பான ஆலோசனை கூறும் லண்டன் சேவ் த சில்ரன் அமைப்பின் குழுவினரின் விஐயம் வை.எம்.சீ.ஏ அமைப்பின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வி ஐயத்தின் போது லண்டன் காரியாலயத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான ஆலோசகர் ரீஸ்ஸா வர்பொகிலி இலங்கைக்கும் இந்தியாவிற்குமான பிராந்திய நிதி பொறுப்பான உத்தியோகத்தர் கட்டியூ ஹயூ தலைமைக் காரியாலயத்தின் வாழ்வாதாரம் மற்றும் பெண்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் தொடர்பான சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் தரங்க குணசிங்க ஆகியோர் கலந்து கொண்டதுடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு சேவ் த சில்ரன் அமைப்பின் உத்தியோகத்தர்களும் வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments