Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்த்தான் இராணுவம் ஊடுருவி தாக்குதல்- 6பேர் காயம்- இந்தியா பதில் தாக்குதல்:

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்த்தான் இராணுவம் ஊடுருவி தாக்குதல். 6 பேர் காயம். இந்திய இராணுவம் பதில் தாக்குதல்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், பூஞ்ச மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இரு பெண்கள் உட்பட ஆறு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இந்திய இராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலினால் ஆறு வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் சிறிய ஆயுதங்கள், தானியங்கி ஆயுதங்கள், மோட்டார் குண்டுகள் மற்றும் ஷெல்; தாக்குதல்களை பயன்படுத்தி பாகிஸ்த்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியது என்றும் இந்திய இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை முதல் இன்று வியாழக்கிழமை இரவு வரை தாக்குதல் தொடருவதாகவும் பூஞ்ச மாவட்டத்தின், சப்ஜியான் மற்றும் மாண்டி ஆகிய பகுதிகளின் இந்திய இராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை தாக்குதலில் காயமடைந்தவர்கள் பூஞ்ச மற்றும் மாண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்த்தான் இராணுவத்தினர் ஊடுருவி தாக்கியதில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று கூறிய இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் உரிப்போரா பகுதியிலிருந்து ஐந்து குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நீண்டகால இடைவெளியின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments