Advertisement

Responsive Advertisement

கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்த திட்டம்! - என்கிறது கொழும்பு ஊடகம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தீர்மானித்துள்ளதாக, கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனராக மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் சிறுபான்மை கட்சிகளை ஒன்றிணைக்கும் முனைப்புக்களில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. இதனால் இரண்டு கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை தேர்தலில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நியமிப்பது குறித்து எவ்வித உத்தியோகபூர்வ கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.

Post a Comment

0 Comments