Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை.9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சந்திக்கவுள்ளார்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் ஆகியவற்றுக்குப் பணியாற்றும் அனைத்து முழுநேர, பகுதி நேர ஊடகவியலாளர்களும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் சமூகச் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியத்துவம் மிக்கது என்ற வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் இதில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
 
இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படின் மாவட்ட தகவல் திணைக்கள உத்தியோகத்தருடன் (0773112601)தொடர்பு கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments