மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பின்தங்கிய பகுதியான மகிழுர்முனை சக்தி வித்தியாலத்தில் இரண்டு மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற கிழக்கு மாகாண கல்வி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விமலவீர திஸாநாயக்க,முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளா கலாநிதி எம்.கோபாலரட்னம்,பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளா திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயம்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.சுகுணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு 75 இலட்சம் ரூபாவினை இதற்காக ஒதுக்கீடுசெய்துள்ளது.
ஆறு வகுப்பறைகளைக்கொண்டதாக சகல வசதிகளுடன் இந்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

0 Comments