Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வைத்தியசாலையில் கள்ளக்காதலி கணவரைப் பார்க்க வந்ததால் ஏற்பட்ட விபரீதம்


விபத்தில் காயமடைந்து தனியார் 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கணவரை கணவரது நெருங்கிய நண்பி பார்க்கவந்ததால் மனைவி அங்கு பெரும் கலவரத்தை உருவாக்கியுள்ளார்.

நேற்று காலை புத்தூர்ப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளால் வீழ்ந்து கால்களில் பெரும் உரசல் காயங்களுடன் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

இவரது மனைவிக்குத் தகவல் தெரிவித்து மனைவி தனியார் வைத்தியசாலைக்கு வந்து கணவருடன் கலவரப்பட்டுள்ளார். சரசாலைப் பகுதியில் வசிக்கும் இவர் தனது மனைவியிடம் கொடிகாமம் செல்வதாகத் தெரிவித்துவிட்டு சென்றே புத்தூரில் விபத்துக்கு உள்ளாகியிருந்தார்.
இதனால் சந்தேகப்பட்டே மனைவி கணவருடன் வைத்தியசாலையில் முரண்பட்டுள்ளார். இந்த சண்டையை வைத்தியசாலையில் இருந்த ஊழியர்கள் சமாதானம் செய்து  மனைவியை அனுப்பியுள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை மனைவி கணவரைச் சந்தித்து விட்டுச் சென்ற  பின்னர் இன்னொரு யுவதி குறித்த நபரைப் பார்வையிட வந்து அவர் அனுமதிக்கப்பட்ட அறைக்குள்  நீண்ட நேரம் தங்கியிருந்ததாகத் தெரியவருகின்றது.
இந் நிலையில் மனைவி திடீரென வந்து அறைக்குள் புகுந்து குறித்த பெண் மீது கடுமையான தாக்குதல் நடாத்தியுள்ளார்.  யுவதி அறையை விட்டு வெளியே வந்தும் துரத்தித் துரத்தி மனைவி தாக்குதல் நடாத்தியுள்ளார். இச் சம்பவத்தால் வைத்தியசாலையில் பரபரப்பு நிலவியுள்ளது.

இதன் பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மனைவியும் யுவதியும் அகற்றப்பட்டதாக தெரியவருகின்றது.

Post a Comment

0 Comments