Home » » 17 வருடங்களின் பட்டிப்பளைப்பிரதேசத்தில் கொம்புமுறி விளையாட்டு விழா

17 வருடங்களின் பட்டிப்பளைப்பிரதேசத்தில் கொம்புமுறி விளையாட்டு விழா

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், கலாசாரபேரவையும் இணைந்து நடாத்தும் பாரம்பரிய கொம்புமுறி விளையாட்டின் 1ம் விளையாட்டுக் கொம்பு முறி விளையாட்டானது (14.06.2014) சனிக்கிழமை முனைக்காடு இராமகிரு
ஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

17வருடங்களின் பின் இவ்வருடம் இப்பிரதேசத்தில் நடைபெறும் இவ்விளையாட்டின் இரண்டாவது நிகழ்வு  முதலைக்குடா ஸ்ரீ பாலையடி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில் கொம்புவரிதல் நிகழ்வு இடம்பெற்று கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பூசைகளும், ஆரம்பநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்று கொம்புமுறி நிகழ்வு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மிகுந்த கரகோசத்துடனும் சுறுசுறுப்பாகவும் இடம்பெற்ற விளையாட்டில் வடசேரி தென்சேரி போன்ற இரு சேரியாரும் தங்களது கொம்புகளை விளையாட்டு இடத்திற்கு கொண்டு அதற்கான ஆப்பு அடித்தல் போன்ற பல நிகழ்வுகளின் பின் இருசேரியாரினாலும் செவ்வாய்குற்றியில் கட்டப்பட்ட கயிற்றை இழுத்தபோது தென்சேரியினரது கொம்பு முறிவடைந்து வடசேரியினர் வெற்றி பெற்றனர்.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன் திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் உதவி பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதில் பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து பார்வையிட்டதோடு ஆராவராங்களையும் தெரிவித்தனர்.
தொடந்து 17ம் திகதி 2வது கொம்புமுமுறி விளையாட்டு பி.ப.02.30மணிக்கும் தாய்க்கொம்பு முறி விளையாட்டு 20ம் திகதி 2.30மணிக்கும் இதே இடத்தில் விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |