Home » » மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வியாழக்கிழமை(9) பகல் வழங்கி வைக்கப்பட்டன.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் பெரும் கஷ்;டங்களை எதிர்நோக்கி வந்தனர்.

வீடுகள் சேதமடைந்த நிலையிலும் தமது பொருளாதாரம் அழிந்த நிலையில் ஒருவேளை உணவினைப் பெற்றுக்கொள்வதற்கே பெரும் கஷ்;டங்களை எதிர்நோக்கிய இந்த மக்களுக்கு வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம் உலர் உணவுகளை வழங்கியது.
வவுணதீவு பிரதேச செயலக பிரதேச செயலாளர் சுதாகர் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை, நொச்சண்டகல், மாவிலங்கண்டசேனை ஆகிய பகுதிகளுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜெகன் இராஜரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகர், சமூக ஊக்குவிப்பாளர் சிவவாசம் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
               

பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டதாக தெரிவித்த வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜெகன் இராஜரட்னம், பன்சேனையில் பாதிக்கப்பட்ட மேலும் ஆறு குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
                
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |