மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரையில் இன்று(14) இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு தனியார் வங்கியொன்றில் காசாளராக கடமை புரியும் வவுனியாவைச் சேர்ந்த எம்.லதீஸன்(23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் மரணம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments