Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு வசதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ள சமுர்த்திக் கொடுப்பனவு தொடர்பாக மக்கள் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் விடுக்கப்பட்டுள்ள 'பொதுமக்களின் கவனத்திற்கு' எனும் தலைப்பிலான அறிவித்தல் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் சமுர்த்தி வலய அலுவலகங்கள், சமுர்த்தி வங்கிகள் போன்ற இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ள சமுர்த்தி முத்திரை கொடுப்பனவு தொடர்பான முறைப்பாடுகளை பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபரின் முறைப்பாட்டு பெட்டியில் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இம் முறைப்பாடுகள் நேரடியாக அரசாங்க அதிபரினால் பரிசீலிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments