Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள்? (வீடியோ இணைப்பு)

இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் போல் தோற்றமளிக்கும் இரண்டு பொருட்களை அவுஸ்திரேலியாவின் செயற்கை கோள்கள் கண்டுபிடித்துள்ளன.

கடந்த 12 நாட்களாக 40க்கும் மேற்பட்ட நாடுகளால் தேடப்பட்டு வரும் மலேசிய விமானம் எம்.எச்.370, என்ன ஆனது என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் போல் உள்ள பொருட்கள் இந்திய கடல் ஒட்டிய பகுதியில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், செயற்கைகோள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்த முழு தகவல்கள் மலேசிய நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேலும் அவுஸ்திரேலிய தரப்பில் சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் 4 விமானங்களும், கடற்படை கப்பல்களும் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.

இருப்பினும் குறைவான வெளிச்சம் காரணமாக, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்ட பொருட்களை தேடும் பணி கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






Post a Comment

0 Comments