மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்திற்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அடிப்படை வசதி இன்றி வாழும் மக்களை நேரில் சென்று நேற்று பார்வையிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரை பிரதேசமாக காணப்படும் காத்தான்குடி பிரதேசத்திற்கு அருகில் உள்ள ஆரையம்பதி பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் அடிப்படை வீடு, கிணறு, மலசல கூட வசதி இன்றி பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் அதிகப் படியான பிள்ளைகளுடன் திகழும் குடும்பங்களாக காணப்படுவதையும் அறிய முடிந்துள்ளது. இவர்களது அடிப்படை தேவையை நிறைவேற்ற மனிதநேய அன்பர்கள் முன்வர வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




0 Comments